மெல்போர்ன் முதல் கொழும்பு வரை புதிய விமான சேவை
2026 ஆகஸ்ட் முதல் முறையாக மெல்போர்ன் முதல் கொழும்பு வரை மூன்று வாராந்த விமானங்களுடன் ஜெட்ஸ்டார் நிறுவனம் இலங்கைக்கு சேவைகளை மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது அவுஸ்திரேலியாவின் ஒரே குறைந்த கட்டண இடைநில்லா சேவையை வழங்கும் நிறுவனமாகும்.
அதிக விமானப் பயணங்கள்
இதன்படி ஜெட்ஸ்டார் தனது முதல் தெற்காசியாவுக்கான சேவையாக, இலங்கைக்கு குறைந்த கட்டண இடைநில்லா சேவையையும் தொடங்க உள்ளது.

2026 ஆகஸ்ட் 25ஆம் அன்று இந்த சேவை மெல்போர்னில் இருந்து இலங்கைக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்தநிலையில், ஜெட்ஸ்டார் விமான நிறுவனத்தின் மெல்போர்ன் - கொழும்பு வழித்தடம் அவுஸ்திரேலியர்களுக்கு இலங்கைக்கு அதிக விமானப் பயணங்களை மேற்கொள்வதற்கான புதிய, நேரடி மற்றும் மலிவு விலை வழியை வழங்கும் என்று ஜெட்ஸ்டார் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டெஃபனி டல்லி கூறியுள்ளார்.
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri