கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு புதிய பணிப்பாளர் நியமனம்
கிளிநொச்சி (Kilinochchi) மாவட்ட வைத்தியசாலைக்கு புதிய பணிப்பாளராக வைத்திய கலாநிதி பூர்ணிமா விமலரத்ன (Dr. Poornima Wimalaratne) தனது பதவியினை பொறுப்பேற்றுள்ளார்.
நிரந்தர தகுதிவாய்ந்த பணிப்பாளர் இன்றி நீண்ட காலமாக இயங்கி வந்த கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு புதிதாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள பணிப்பாளர், குறித்த வைத்தியசாலையில் நிலவுகின்ற ஆளணி மற்றும் பௌதீக வளப் பற்றாக்குறை விடயங்களில் அதிக கவனம் செலுத்தி அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தாம் எதிர்பார்ப்பதாக வைத்தியசாலை சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.
பதில் பணிப்பாளர்
மேலும், இதுவரை காலமும் பதில் பணிப்பாளராக கடமையாற்றி வந்த வைத்தியர் சுகந்தன் மீண்டும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் திட்டமிடல் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |