புதிய பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நியமனம்
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க நியமிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது புதிய பாதுகாப்பு செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, புதிய பாதுகாப்பு செயலாளர் பதவிக்கு எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சம்பத் துயகொண்டா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
சம்பத் துயகொண்டா இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது 09 MI 24 தாக்குதல் ஹெலிகொப்டர் படைப்பிரிவின் விமானியாகப் பணியாற்றியிருந்தார்.
இந்நிலையில், தேசிய மக்கள் சக்தியுடன் (NPP) தொடர்புகளை பேணியமைக்காக ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொண்டாவை முந்தைய அரசாங்கம் கறுப்புப் பட்டியலில் இணைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri
