பல்கலைக்கழங்களில் அறிமுகமாகும் புதிய பாடநெறிகள்
புதிய கல்வியாண்டில் பல்கலைக்கழகங்களில் பல பாடநெறிகள் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
தரவுசார் பட்டப்படிப்பு பாடநெறி சப்ரகமுவ பல்கலைக்கழத்தில் ஆரம்பிக்கப்படும். இதற்காக 50 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
ஆரம்பநிலை கல்வி தொடர்பான பாடநெறி ஆரம்பிக்கப்படவுள்ளதோடு இதற்காக 75 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.
புதிய பாடநெறி
கொழும்பு மருத்துவ பீடத்தில் வைத்திய தொழில்நுட்பம் தொடர்பான புதிய பாடநெறி
ஆரம்பிக்கப்படும். ஊவா வெல்லஸ்ஸ பல்கலைககழகத்தில் புதிதாக மருத்துவ பீடம்
ஆரம்பிக்கப்படும். இதற்காக 50 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.
புதிய கல்வியாண்டில் பல்கலைக்கழகங்களில் இரண்டு புதிய பீடங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
கற்கை பிரிவுகள்
புதிதாக 20 கற்கை பிரிவுகள் ஆரம்பிக்கப்படும். புதிய கல்வியாண்டில் மருத்துவ பீடங்களுக்கு 615 மாணவர்கள் மேலதிகமாகவும் பொறியியல் பீடங்களுக்கு 480 மேலதிக மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.
நாட்டின் பல்கலைக்கழக கட்டமைப்பில் தற்போது 12
மருத்துவ பீடங்களும் ஆறு பொறியில் பீடங்களும் உள்ளதாக சிரேஷ்ட பேராசிரியர்
சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார்.