இலங்கை தொடர்பில் நாணய நிதியத்தின் புதிய நிபந்தனை
இலங்கைக்கு தாம் நிதி உதவி வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியம் புதிய நிபந்தனைகளை விதித்து வருகிறது.
முன்னதாக தமது நிதியுதவியை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் இலங்கையில் ஸ்திர அரசியல் அரசியம் என்று நிதியத்தின் பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியாவா குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து, நேற்று சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் கிருஸ்ணா ஸ்ரீவாசன் வெளியிட்ட கருத்து ஒன்றில், இலங்கை தமது கடன் வழங்குனரான சீனாவுடன், கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கை பேச்சுவார்த்தையை நடத்த உடன்படிக்கையை எட்டவேண்டும் என்ற நிபந்தனையை விதித்திருந்தார்.
உடன்பாடு ஒன்றினை இலங்கை எட்ட வேண்டும்
இந்தநிலையில் புதிதாக இலங்கை, சீனா உட்பட்ட அதன் கடன் வழங்குனர்களுடன் ஒரு உடன்பாட்டை எட்ட வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் ப்யர் ஒலிவியர் கௌரிஞ்சாஸ் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் சர்வதேச நாணய நிதியம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்த அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம் உள்ளது.
எனினும் சீனா உள்ளிட்ட கடனாளிகளுடன் இலங்கை கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தை
எட்ட வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் விரும்புவதாக அவர்
குறிப்பிட்டுள்ளார்.