யாழ்ப்பாண மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! ஆரம்பிக்கப்படவுள்ள புதிய பேருந்து சேவை
சங்கானை, சண்டிலிப்பாய் மற்றும் காரைநகர் பிரதேச மக்களின் நலனை கருத்திற்கொண்டு 782 வழித்தட பேருந்து சேவையில் புதிய இணைப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த சேவையானது நாளை(24) முதல் இலங்கை போக்குவரத்து சபையினால்ஆரம்பிக்கப்பட உள்ளதாக காரைநகர் அரச போக்குவரத்து சாலை முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து சேவை
கொழும்பு - காரைநகர் இடையே போக்குவரத்தில் ஈடுபடும் அரச பேருந்து கொழும்பில் இருந்து வந்து அதிகாலை 5.00 மணியளவில் யாழ்ப்பாணம் தொடருந்து நிலையத்திற்கு சென்று அங்குள்ள பயணிகளை ஏற்றியவாறு யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்கு வரும்.

பின்னர் அங்கிருந்து 5.50 மணிக்கு வழமை போல் காரைநகர் நோக்கி போக்குவரத்து சேவையில் ஈடுபடும்.
அதுபோல பி.ப 6.20 மணிக்கு யாழ்ப்பாணம்- தொடருந்து நிலையத்திற்கு சென்று அங்குள்ள பயணிகளை ஏற்றியவாறு காரைநகர் நோக்கி போக்குவரத்து சேவையில் ஈடுபடும் என போக்குவரத்து சாலை முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam