அயலகத் தமிழர் தினம்.. இலங்கை கடற்றொழிலாளர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை
அயலகத் தமிழர் தினம் என்ற நிகழ்வை நாங்கள் வரவேற்றாலும் இன்று வரை தமிழக கடற்றொழிலாளர்களின் வருகையை கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் நேற்று (13.01.2026) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "தமிழகத்தில் இடம்பெற்ற அயலக தமிழர் தினம் என்ற நிகழ்வு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் விமர்சையாக நடைபெற்றிருக்கின்றது.
முக்கிய விடயங்கள்
இலங்கையில் இருந்து அதற்கான பிரதிநிதிகள் சென்றிருக்கின்றார்கள் பல விடயங்கள் குறிப்பாக தமிழால் இணைகின்ற பல விடயங்கள் அங்கு இடம் பெற்றுள்ளன.

இது காலத்தின் தேவையாகும்,உண்மையிலேயே இவ்வாறான செயற்பாடுகள் தான் தமிழ் என்ற உணர்வையும் தமிழோடு இணைய வேண்டும் என்ற அந்த ஆசையும் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தி இருந்தது.
உண்மையில் இரு நாட்டை நாங்கள் எடுத்துக் கொண்டால் தமிழால் இணைவோம் என்பதற்கு பொருத்தமான நாடாக தமிழகத்துக்கும் வடபகுதிக்கும் நிறைய உறவு இருக்கிறது.
இந்தியாவிற்கும் இலங்கைக்குமான உறவு தமிழால் இணையக் கூடிய வகையில் எந்த நாடுகளும் இல்லை.இலங்கைக்கு தான் அந்த வார்த்தை பொருத்தமானது" என கூறியுள்ளார்.