எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக் கொள்ள ஆளடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும்
எரிவாயு சிலிண்டர்களைப் பெற்றுக் கொள்ள ஆளடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும் என சில முகவர்கள் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆளடையாளத்தை உறுதிப்படுத்தி, எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில், விற்பனை முகவர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்யும் விற்பனை முகவர் நிலையங்களுக்கு முன்பாக அறிவிப்பு பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஒருவருக்கு ஒரு சிலிண்டர் மாத்திரம். எரிவாயு கொள்வனவு செய்ய மின்சாரம் அல்லது நீர் கட்டண பற்றுச்சீட்டு கொண்டு வர வேண்டும் என அந்த அறிவிப்பு பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களின் பதிவை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே, இந்த அறிவிப்பு பலகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக விற்பனை முகவர்கள் தெரிவிக்கின்றனர்.
வேறு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள், வேறு பகுதிகளுக்கு சென்று எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்கின்றமையினால், குறித்த பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை தவிர்க்கும் வகையிலேயே, ஆளடையாளத்தை உறுதிப்படுத்தி, எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர் யார் தெரியுமா? விஜய்யா அல்லது ரஜினியா? Cineulagam
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
விஜய்யை பார்க்காமல் செல்ல மாட்டேன் - உத்தரபிரதேசத்தில் இருந்து 2,700 கி.மீ நடந்து வந்த இளைஞர் News Lankasri