யாழ். நெடுந்தீவில் பரபரப்பை ஏற்படுத்திய ஐவரின் கொலை விவகாரம்! ஒருவர் கைது
யாழ். நெடுந்தீவு பகுதியில் வீடொன்றிலிருந்து ஐந்து பேர் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் ஜேர்மனியில் இருந்து திருப்பி அனுப்பட்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் குறிந்த சந்தேகநபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர் படுகொலை செய்யப்பட்டவர்களின் வீட்டில் தங்கியிருந்த நபர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் அவர் புங்குடுதீவினை சேர்ந்தவர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
மேலும், தீவக சிவில் சமூகத்தினரின் உதவியுடன் யாழ். நெடுந்தீவு படுகொலையுடன் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலே குறித்த சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
