நாயாறு பகுதியில் பொதுமக்கள் போக்குவரத்திற்காக முற்றாக இலவச சேவைக்கு ஏற்பாடு
அண்மைய வெள்ள அனர்த்தம் காரணமாக நாயாறுப் பகுதியில் இரு முக்கிய பாலங்கள் சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் இராணுவத்தின் ஒத்துழைப்புடன் புரைமைப்புப் பணிகள் விரைவாக இடம்பெற்று வருகின்றது.
நாயாறு பகுதியில் தற்போது கடற்படை படகுகள் பொதுமக்கள் போக்குவரத்திற்காக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மேலும், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சைக்கிள்களை எடுத்துச் செல்லும் வசதிக்காக மற்றொரு படகும் சேவையில் ஈடுபட்டு வந்த நிலையில் தனியார் படகு சேவையும் கட்டணம் அறவிட்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சைக்கிள்களை எடுத்துச் சென்ற நிலைமை தொடர்பாக மாவட்ட அரச அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்த நிலையில் நேரடியாக களத்திற்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்த அரச அதிபர் கடற்படை ஆதரவுடன் நடைபெற்று வந்த இலவச படகு சேவைக்கு மேலதிகமாக பாதுகாப்பு படையினரின் கூடுதல் உதவியையும் 591 ஆவது படையணியின் பொறுப்பாளரிடம் கோரியிருந்தார்.
அதற்கிணங்க கடற்படை ஆதரவுடன் நடைபெற்று வந்த இலவச படகு சேவைக்கு மேலதிகமாக பாதுகாப்புப்படையினரின் இலவச படகு சேவையும் பெற்று அனர்த்த முகாமைத்துவ சேவை நிலையத்தின் ஒத்துழைப்புடன் விரிவாக்கவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனால், அனைத்துத் தனியார் கட்டண படகு சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இனிமேல் நாயாறு பாலம் பகுதிக்குள் செல்லவும் வரவும் முழுமையாக இலவச படகு சேவையை மட்டும் பொதுமக்கள் பயன்படுத்த முடியும்.









