முல்லைத்தீவு ஊடகவியலாளருக்கு கடற்படையால் அச்சுறுத்தல்: வடமாகாண ஊடக அமையம் கண்டனம் (Photos)

Mullaitivu Northern Provincial Council Sri Lanka Navy
By Kanamirtha Jun 09, 2022 10:35 AM GMT
Report

முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளரின் பணிக்குக் கடற்படையினால் இடையூறு ஏற்படுத்தப்பட்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவத்திற்கு வடமாகாண ஊடக அமையம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

அத்துடன் வடமாகாணத்தில் பணியாற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மேலும் தெரிவிக்கப்பட்டு அறிக்கை ஒன்றினை இன்று வெளியிட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடக்கு மாகாணத்தில் செயற்படும் ஊடகவியலாளர்களுக்குத் தொடர்ந்து பாதுகாப்பு தரப்பினரால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதும் அவர்களது பணிகளைச் சுதந்திரமாக மேற்கொள்வதற்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன.

இச் செயற்பாடுகள் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக தமது அறிக்கையிடலை மேற்கொள்வதற்குத் தடையாகவும் அமைகின்றது.

முல்லைத்தீவு ஊடகவியலாளருக்கு கடற்படையால் அச்சுறுத்தல்: வடமாகாண ஊடக அமையம் கண்டனம் (Photos) | Navy Threatens Mullaitivu Journalist Media

ஊடகவியலாளர்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை 

முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில் பொதுமக்களின் காணி சுவீகரிப்பு அளவீடுகள் கடற் படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தை அறிக்கையிடச் சென்ற ஊடகவியலாளர் க.குமணன் மீது கடற்படை மற்றும் பொலிஸார் அவரது கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தி அச்சுறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்ட காணொலி சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கை ஏனைய ஊடகவியலாளர்களின் பணிகளுக்கும் பெரும் பாதிப்புக்களையும் ஏற்படுத்துகின்றது.

அவர் தன்னை ஊடகவியலாளர் என்று உறுதிப்படுத்திய பின்னரும் பொலிஸார் அவரை அழைத்துச் செல்ல முற்படுவதையும் கடற்படை ஒருவர் அவரை அச்சுறுத்தல் விடுக்கும் செயற்பாடுகளுக்கும் வடமாகாண ஊடக அமையம் தனது கண்டனத்தைத் தெரிவிக்கின்றது.

முல்லைத்தீவு ஊடகவியலாளருக்கு கடற்படையால் அச்சுறுத்தல்: வடமாகாண ஊடக அமையம் கண்டனம் (Photos) | Navy Threatens Mullaitivu Journalist Media

இவ்வாறு சமூகத்திலுள்ள பல்வேறு அடக்குமுறைகளையும் அநீதிகளையும் தட்டிக்கேட்கும் போது ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தும் நடவடிக்கை அவர்களது சுதந்திர செயற்பாட்டிற்குத் தடை ஏற்படுத்துகின்றது.

எனவே இவ்வாறு இடம்பெறும் சம்பவங்களுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழு தனது முழுமையான விசாரணைகளை ஆரம்பித்து சமூகத்தின் செயற்பாடுகளையும் வெளிக்கொண்டு வருவதற்கும் உரிய சுதந்திரமான செயற்படுவதற்கும் வழியேற்படுத்த முன்வருமாறும், ஊடகவியலாளர்கள் அறிக்கையிடல்களை மேற்கொள்ளும் போது விடுக்கப்படும் அச்சுறுத்தல்களுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US