நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற கைது நடவடிக்கைகள்
கண்டாவளையில் இடியன், கட்டுத்துவக்குடன் துப்பாக்கி, ரி56 தோட்டாக்களுடன்
ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி - தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டாவளை,கோணங்குளம் பகுதி வீடொன்றிலிருந்து இடியன் துவக்கு 3, கட்டுத்துவக்கு 11, இடியன் துவக்கின் பட் 5, ரி56 துப்பாக்கி தோட்டாக்கள் 250, ஈய குண்டுகள் 8, பட்டாசு வெடிகள் 16, பன்றி இறைச்சி 8 கிலோ, உடும்பு தோள்1 போன்ற பொருட்களுடன் 31 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தருமபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம்
வயாவிளான் - குட்டியப்புலம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் சுண்ணாம்புக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரங்கள் கைப்பெற்றப்பட்டுள்ளன.
காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அவர்களின் கீழ் இயங்கும் புலனாய்வு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது உழவு இயந்திர சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், உழவு இயந்திரங்களும் சுண்ணாம்புக்கல்லுளடன் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
செய்தி - கஜிந்தன்
கோப்பாய்
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரந்தன் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் சட்டவிரோதமாக சுண்ணாம்புக்கல் அகழ்ந்த குற்றச்சாட்டின் கீழ் உழவு இயந்திரத்துடன் அதன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சாரதி சுண்ணாம்புக் கல்லினை அகழ்ந்து அதனை உழவு இயந்திரத்தில் ஏற்றிச் செல்வதற்கு முற்பட்ட வேளை இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கோப்பாய் விசேட பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கோப்பாய் பொலிஸாரால் இக்கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது மீட்கப்பட்ட உழவு இயந்திரத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இளவாலை
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உயரப்புலம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தங்க நகை களவுபோயுள்ளது.
இது குறித்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் சந்தேகநபரை கைது செய்வதற்கு நீண்ட நாட்களாக இளவாலை பொலிஸார் வலைவீசி வந்துள்ளனர்.
இந்நிலையில் இளவாலை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய சந்தேகநபர் களவுபோன
தங்கநகை மற்றும் ஒரு கிராம் கஞ்சாவுடன் நேற்றிரவு (12) கைது
செய்யப்பட்டுள்ளார்.

கார்த்திகை தீபம் சீரியல் நடிகை அர்த்திகாவின் புதிய தொடர்.. சன் டிவியில் விரைவில், ஹீரோ யார் தெரியுமா? Cineulagam
