சீட்டிழுப்பு நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தேசிய லொத்தர் சபையின் அதிகாரப்பூர்வ லோகோ மற்றும் பரிசு விநியோக நிகழ்வுகளை பயன்படுத்தி மோசடி செய்யப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான போலி கேசினோ வணிகங்கள் மற்றும் போலி பேஸ்புக் கணக்குகள் குறித்து தேசிய லொத்தர் சபைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற மோசடி வணிகங்களில் ஈடுபட வேண்டாம் என தேசிய லொத்தர் சபை பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
சீட்டிழுப்பு நடவடிக்கை
தேசிய லொத்தர் சபையின் லொத்தர் சீட்டிழுப்பு நடவடிக்கை ஒவ்வொரு நாளும் இரவு 9.30 மணிக்கு சுயாதீன தொலைக்காட்சி சேவையில் நடைபெறுகிறது.
மேலும் அதன் மறு ஒளிபரப்புகள் தேசிய லொத்தர் சபையின் பேஸ்புக் கணக்கு மற்றும் சுயாதீன தொலைக்காட்சி சேவையின் யூடியூப் சேனல் மூலம் ஒளிபரப்பப்படுகின்றது.
இவற்றிற்கு மேலதிகமாக, தேசிய லொத்தர் சபையின் லொத்தர் சீட்டுகளைப் பயன்படுத்தி நடத்தப்படும் போலி குலுக்கல் மற்றும் போலி சமூக ஊடக கணக்குக்குகள் பற்றிய தகவல் உள்ளவர் 0114607000 என்ற எண் மூலம் தெரியப்படுத்துமாறு தேசிய லொத்தர் சபை கேட்டுக்கொண்டுள்ளது.




