ஏழு பேரில் ஒருவருக்கு மனநலப் பாதிப்பு:திடுக்கிடும் தகவல்கள்
உலக சுகாதார அமைப்பின் மதிப்பீடுகளின்படி, ஏழு பேரில் ஒருவருக்கு மனநலப் பிரச்சினை இருக்கலாம் என்று அங்கொடை தேசிய மனநல நிறுவனத்தின் இயக்குநர் வைத்தியர் தம்மிக அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
தேசிய மனநல நிறுவனத்தில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறுவதாகவும், ஒவ்வொரு நாளும் 600க்கும் மேற்பட்ட நோயாளிகள் வைத்தியசாலைகளுக்கு வருகை தருவதாகவும் அவர் கூறினார்.
சிகிச்சை பெறும் நோயாளிகளின் தன்மை
மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட எவரும் 24 மணி நேரமும் செயல்படும் 1926 துரித அழைப்பில் மனநலப் பிரச்சினைகள் குறித்து ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம்.
அங்கொடை தேசிய மனநல நிறுவனத்தில் அமைந்துள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் 24 மணி நேரமும் பரிசோதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
இளைஞர்கள் வாட்ஸ்அப் (1926) மூலம் குறிப்பிடும் மனநலப் பிரச்சினைகளுக்கு கூட வாட்ஸ்அப் மூலம் பதிலளிக்கப்படுகிறது.

இதற்கிடையில்,மாணவர்கள், குழந்தைகள் கையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையாகி வருவது குறித்து பெற்றோரிடமிருந்து வரும் முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.
குழந்தைகள் கையடக்கத் தொலைபேசிகளுக்கு அடிமையாவதால், அவர்கள் தங்கள் கல்வி நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam