முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறும் தடைசெய்யப்பட்ட தொழில்: தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் எதிர்ப்பு
புதிய சட்டதிருத்தத்திற்கு முற்றுமுழுதாக முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கின்றோம் என தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட தலைவர் அன்னலிங்கம் நடனலிங்கம் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறும் தடைசெய்யப்பட்ட தொழில் , புதிய சட்டத்திருத்தம் தொடர்பாகவும் இன்றையதினம் (20.03.2025) முல்லைத்தீவில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வழங்கப்பட்ட வாக்குறுதி
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், புதிய சட்டத்திருத்தம் தொடர்பாக 04.01.2025 அன்றையதினம் நாவாந்துறை சனசமூக நிலையத்தில் எமது இணையத்தினர் இணைந்து கடற்தொழில் அமைச்சரை சந்தித்து கதைத்த போது புதிய சட்ட திருத்தம் இடம்பெறும் போது எமது இணையத்தின் நிர்வாகத்தினரையும், அவ் மாவட்டங்களில் இருக்கும் சங்கங்களையும் அழைத்து அவர்களது கருத்துக்களையும் உள்வாங்கியே சட்டதிருத்தம் மேற்கொள்ளப்படுமென வாக்குறுதி அளித்திருந்தார்.
எமது அமைப்புக்களையோ, மாவட்ட சங்கங்களையோ அழைக்காது புதிய சட்டம் நடைமுறைப்படுத்துவதாக ஊடகங்கள் வாயிலாக அறிகின்றோம். இந்த புதிய சட்டதிருத்தத்திற்கு முற்றுமுழுதாக முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கின்றோம்.
1986 ஆம் ஆண்டு உள்ள பழைய சட்டத்தினை நடைமுறைப்படுத்துமாறும் கடற்தொழில் அமைச்சரை கேட்டு நிற்கின்றோம். முல்லைத்தீவு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட தொழில்கள் அனைத்தும் முற்று முழுதாக தடையென ஒலிபெருக்கி மூலம் அறிவித்தும் தொடர்ச்சியாக சட்டவிரோத தொழிலில் ஈடுபடுபவர்களை நீரியல் வள திணைக்களம், வட்டுவாகல் கடற்படையினரின் ஒத்துழைப்புடன் சட்டத்தின் முன் நிறுத்தி அவ் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றோம்.
தனிப்பட்ட நபரொருவருக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி
முல்லைத்தீவு மாவட்டத்தில் வெளி மாவட்டங்கள், தென்பகுதிகளில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதன் அடிப்படையில் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே அதாவது யுத்த காலத்திற்கு முன்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் நிரந்தர வதிவிடமாக கொண்டவர்களிற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு தொழில் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
தனிப்பட்ட நபர் ஒருவருக்கு நீர்வள திணைக்கள பணிப்பாளரின் செல்வாக்குடன் 15, 20 படகுகளிற்கு என அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது.
அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டு வருகின்ற படகுகளிற்கு முல்லைத்தீவு மாவட்ட சங்கங்கள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்து அவர்களை தொழில் செய்ய முடியாதவாறு ஏற்பாடு செய்திருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

நாசா விண்வெளி வீரரின் உடல்நலம் குறித்து மருத்துவர்கள் கவலை: புதிய புகைப்படத்தால் அதிர்ச்சி News Lankasri

மகாராஜாவை விட அதிக விலைக்கு விற்பனை ஆன விஜய் சேதுபதியின் புதிய படம்.. மகிழ்ச்சியில் தயாரிப்பாளர் Cineulagam
