நஸீர் அஹமட்டின் உடைமைகள் தீ வைப்பு விவகாரம்: கைதாகியவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Sri Lanka Police Batticaloa SL Protest Sri Lanka Police Investigation
By Kanamirtha May 14, 2022 02:06 PM GMT
Report

ஏறாவூரில் ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் காரியாலயம் உட்பட வீட்டின் உடைமைகள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 8 பேரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் ஏறாவூர் பிரதான வீதியிலுள்ள காரியாலயம், வீடு, அவரது உறவினரின் வீடு, விடுதி, கடை என்பன தீக்கிரையாக்கியதுடன், 3 ஆடைத்தொழிற்சாலையினை முற்றுகையிட்டு சேதமாக்கியுள்ளனர்.

இதனையடுத்து ஆடை தொழிற்சாலையில் வேலை பார்த்துவரும் நூற்றுக்கணக்கானோர் நேற்று முன்தினம் ஒன்றிணைந்து ஆடை தொழிற்சாலை சேதமாக்கியவர்களைக் கைது செய்து சட்டத்தின் முன்னிறுத்துமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

நஸீர் அஹமட்டின் உடைமைகள் தீ வைப்பு விவகாரம்: கைதாகியவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Nasir Ahmed S Set Fire Court Orders Arrests

ஆடை தொழிற்சாலையிலிருந்து பொலிஸ் நிலையம் நோக்கிச் சென்ற ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை பொலிஸார் இடைமறித்து சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதாக ஆர்ப்பாட்டகாரர்களிடம் வாக்குறுதியளித்தனர்.

இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்காவின் ஆலோசணைக்கமைய மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட விசாரணையின் போது விடுதியில் இருந்து கொள்ளையிடப்பட்ட  பொருட்களுடன் 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நேற்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 25 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை தீயிடப்பட்ட விடுதி மற்றும் கடை ஆகிய கட்டடங்களை வாடகைக்குப் பெற்று அதனை நடாத்தி வந்துள்ளதாகவும், பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அத்துடன் இந்த வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் மாவட்ட குற்ற விசாரணை பிரிவினர் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US