ஜனாதிபதி அநுரவுக்கு ஆதரவு தெரிவிக்கும் மகிந்த கட்சி
தேசிய மக்கள் சக்தி, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய முயற்சித்தால் ஆதரவளிக்கப்படும் என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.
தேர்தல் முறைமையை மாற்றுவதற்கும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யவும் பூரண ஆதரவளிக்கப்படும் என நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி
1994ம் ஆண்டு முதல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்ட போதிலும் இதுவரையில் எவரும் அதனை செய்யவில்லை என நாமல் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வதற்கு இதுவே பொருத்தமான தருணம் என அவர் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்வதற்கு காலம் தாழ்த்தக்கூடாது என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.