மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும் .....! நாமல் ராஜபக்ச எச்சரிக்கை
நாட்டு மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அமைந்தால் அது தொடர்பில் கடுமையான தீர்மானம் எடுப்போம் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (03) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
தொடரும் மிலேச்சத்தனமான தாக்குதல்கள்......! காசா வீதியில் சிதறி கிடக்கும் சடலங்கள்: ஹமாஸ் அமைப்பினர் சூளுரை (Video)
மின்கட்டண அதிகரிப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய அரசாங்கம் எடுத்துள்ள ஒருசில தீர்மானங்களினால் நாட்டு மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
மின்னுற்பத்தி கட்டமைப்பில் மாற்று திட்டங்களை செயற்படுத்துவதை விடுத்து மின்கட்டண அதிகரிப்புக்கு மாத்திரம் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. முறையற்ற வகையில் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு முதல் பெறுமதி சேர் வரி வீதத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கி அரச வருமானத்தை அதிகரித்து விட்டோம் என சர்வதேசத்துக்கு காண்பிப்பதால் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாது என்பதை அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும். வாழ்க்கை செலவு அதிகரிப்பினால் மக்கள் மீண்டும் வீதிக்கிறங்கி போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
பொருளாதார நெருக்கடி
சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளுக்கு அமைய அரசாங்கம் செயற்பட்டால் அரசாங்கம் தொடர்பில் நாட்டு மக்கள் தீர்மானம் எடுப்பார்கள். 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
பொருளாதார நெருக்கடி
நாட்டு மக்களை மென்மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் வரவு செலவுத் திட்டம் காணப்பட்டால் கடுமையான தீர்மானம் எடுப்போம்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காகவே ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தோம். நிறைவடைந்த ஒரு வருட காலத்தில் பாரிய மாற்றங்கள் ஏதும் சமூக கட்டமைப்பில் ஏற்படவில்லை.
நாட்டு மக்களை தொடர்ந்து நெருக்கடிக்குள்ளாக்கினால் மக்கள் போராட்டம் மீண்டும் தலைத்தூக்கும் என தெரிவித்துள்ளார்.