சிறையில் இருக்கும் நாமல் அநுரவுக்கு எழுதிய கடிதம்
கடந்த காலத்தில் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமங்களை எதிர்கொண்டு, பின்னர் அக்கடன்களை முழுமையாகத் திருப்பிச் செலுத்திய தனிநபர்களுக்கு வங்கிக் கடன்களைப் பெறுவதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தக் கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.
முன்வைத்துள்ள கோரிக்கை
தொழில் நடத்தும் தனிநபர்களுக்கும், புதிய தொழில் முனைவோர்களுக்கும் தங்கள் தொழில்களை விரிவுபடுத்த அல்லது புதிய தொழில்களைத் தொடங்க வங்கிக் கடன்கள் அத்தியாவசியமானவை என்று அவர் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும், கடன் விண்ணப்பிக்கும் போது கடன் தகவல் பணியகத்தின் (CRIB) அறிக்கைகள் சரிபார்க்கப்படுவதால், கடந்த காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமங்களைச் சந்தித்து, பின்னர் தங்கள் கடன்களை முழுமையாகச் செலுத்தி முடித்தவர்கள் கூட, மீண்டும் கடன் பெறுவதில் தடைகளைச் சந்திப்பார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
YOU MAY LIKE THIS..