நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ பெருவிழாவிற்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று (08) இடம்பெற்றுள்ளது.
செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயப் பூர்வமாக ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும்.
ஆலய பிரதம குருக்களிடம் கையளிப்பு
அந்தவகையில் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள உபகாரரின் வீட்டில் இருந்து கொடிச்சீலை யாழ் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல்மடம் முருகன் ஆலயத்திற்கு எடுத்துவரப்பட்டு அங்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து அங்கிருந்து கொடிச்சீலை சிறிய ரதத்தின் மூலம் பருத்தித்துறை வீதி ஊடக நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினை வந்தடைந்தது.
தொடர்ந்து ஆலய வெளிவீதி வலம் வந்து சுபநேரத்தில் கொடிச்சீலை நல்லூர் ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டது.

நாளை காலை பத்து மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளது.
நல்லூரிலுள்ள செங்குந்த மரபினர் வருடா வருடம் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலையை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 19 மணி நேரம் முன்
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam