எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அமைச்சர் நளிந்த வெளியிட்ட தகவல்
மத்திய கிழக்கின் போர்ச் சூழல் காரணமாக உலகச் சந்தையில் நிலவும் பெற்றோலியப் பொருட்களின் விலை ஏற்ற இறக்கங்களுக்கு அமைய எதிர்காலத்தில் ஓரளவுக்கு மீண்டும் எரிபொருள் விலையை அதிகரிக்க நேரிடும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்
எரிபொருள் விலையில் ஏற்ற- இறக்கம்
எவ்வாறாயினும் எரிபொருள் விலையை அதிகரிக்கும் போது அதன் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியை திறைசேரியும் (Treasury) பொற்றோலியக் கூட்டுத்தாபனமும் பொறுப்பேற்றுக்கொள்ளும் என நேற்று முன்தினம் (16.04.2026) களுத்துறை பகுதியில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு போர்ச் சூழலுக்கு மத்தியிலும் மக்களுக்கு எரிபொருள் மற்றும் மின்சாரத்தை தடையின்றி வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
தற்போதைய போர்ச் சூழல் தணிந்தவுடன் மீண்டும் எரிபொருள் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.