சுரேஷ் சலே தொடர்பில் நளிந்த ஜயதிஸ்ஸ வெளிப்படுத்திய முக்கிய தகவல்
வாய் மூலமாக உணவு உட்கொள்வதை மாத்திரமே சுரேஷ் சலே தவிர்த்துள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளர் சுரேஷ் சலே, வாய் மூலமாக உணவு உட்கொள்வதை மட்டுமே தவிர்த்துள்ளார்.
சலேவின் முயற்சி பயனற்ற செயல்
மருத்துவ விஞ்ஞான முறைகளின் ஊடாக உடலுக்கு தேவையான திரவ ஆகாரங்கள் அல்லது ஊட்டச்சத்துக்களைப் பெற்றுக்கொள்வதை சுரேஷ் சலே நிராகரிக்கவில்லை.

அத்தகைய மருத்துவ முறையிலான ஊட்டச்சத்துக்கள் இன்றி எவராலும் இவ்வளவு காலம் பட்டினியுடன் உயிர்வாழ முடியாது.
முன்னாள் புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளரின் இந்த முயற்சி பயனற்ற ஒரு செயலாகும் என குறிப்பிட்டுள்ளார்.