மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்: நாகபூசணி அம்மன் சிலை விவகாரம் குறித்து டக்ளஸ் கருத்து (Video)
"ஒவ்வொருவருடைய மத உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கப்பட வேண்டும்" என நயினாதீவு நாகபூசணி அம்மன் சிலை விவகாரம் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (15.04.2023) மாலை பண்ணை சுற்று வட்டத்தில் அமைக்கப்பட்ட நயினாதீவு நாகபூசணி அம்மனின் சிலையைக் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாண பண்ணை சுற்று வட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நாகபூசணி அம்மன் திருவுருவச் சிலைக்குத் தமிழ் புதுவருடப் பிறப்பில் உருத்திர சேனா அமைப்பினால் நேற்று முன்தினம் (14.04.2023) பால் அபிசேகம் செய்யப்பட்டுள்ளது.
ஏனைய மதங்கள்
மேலும், நயினாதீவு விகாராதிபதியின் தலையீட்டினாலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவித்திருந்தன.
இந்த நிலையில், நேற்றைய தினம் பண்ணை சுற்று வட்டத்தில் அமைக்கப்பட்ட நயினாதீவு நாகபூசணி அம்மனின் சிலையைக் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டுள்ளார்.
இதன்போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர், ஒவ்வொருவருடைய மத உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கப்பட வேண்டும் என்றும் அது ஏனைய மதங்களைப் பாதிக்காத வகையில் அமைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri