நாம் 200 ஏற்படுத்திய சர்ச்சை: மக்கள் விசனம்(Video)
நாம் 200 நிகழ்வில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் தொடர்பில் மக்களிடயே வினவிய போது மக்கள் பின்வருமாறு தமது கருத்துகளை வெளிப்படுத்தினர்.
இதன் போது மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
“நாம் 200 நிகழ்ச்சியை நடாத்தியமைக்கு முக்கிய காரணம் தேர்தலுக்கான வாக்குகளை உறுதிபடுத்தி கொள்வதே ஆகும்.
மலையக மக்களின் நிலைமையை வெளிகாட்டி நிதியை பெறும் நோக்கத்தில் மாத்திரமே அரசாங்கம் தற்பொழுது செயல்பட்டு வருகிறது.
குறித்த நிகழ்வில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் மீது நம்பிக்கை கொள்வது மீண்டும் தங்களை முட்டாள்களாக்கி விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
வாக்குறுதிகளை மாத்திரம் வழங்குவதனால் மக்களின் நிலையில் மாற்றம் ஏற்படப் போவதில்லை, கொடுத்த வாக்குறுதிகளை செயல்படுத்துங்கள்” என மக்கள் வலியுறுத்தினர்.