யாழ். உணவு விடுதியில் இறைச்சி கொத்து வாங்கியவருக்கு காத்திருந்த ஏமாற்றம்
யாழ்.(Jaffna) தெல்லிப்பழை பகுதியிலுள்ள உணவு விடுதி ஒன்றில் தரமற்ற இறைச்சி கொத்தினை வழங்கியமை தொடர்பில் குறித்த உணவு விடுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் ஒருவர் குறித்த உணவு விடுதியில் மாட்டு இறைச்சி கொத்தினை வாங்கி உட்கொண்ட வேளை அந்த உணவில் நாய் இறைச்சி என சந்தேகிக்கும் வகையில் தோற்றமளிக்கும் அதிக ரோமங்களை கொண்ட இறைச்சி துண்டொன்று தென்பட்டுள்ளது.
சீல் வைக்கப்பட்ட உணவு விடுதி
இதனையடுத்து, அந்த பகுதியிலுள்ள பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவருடன் உணவு விடுதியினுள் இருந்து ஊடகவியலாளர் தொடர்பு கொண்டுள்ளார்.
இருப்பினும் அன்றையதினம் இந்த சம்பவம் தொடர்பாக பொது சுகாதார பரிசோதகரால் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.
இதையடுத்து, ஊடகவியலாளர் உணவு விடுதியில் உணவிற்கான பற்றுச்சீட்டு மற்றும் சந்தேகிக்கப்படும் இறைச்சி உள்ளிட்ட புகைப்படம் என்பவற்றை ஆவணப்படுத்தி தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பரா.நந்தகுமாரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
இதன்போது, மோசமான இறைச்சியை வழங்கினார் என்பது தொடர்பான முறைப்பாடு ஒன்றினை குறித்த ஊடகவியலாளர் சுகாதார வைத்திய அதிகாரிக்கு கடிதம் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில், முறைப்பாட்டு கடிதத்தினை ஆதாரமாகக் கொண்டு சந்தேகத்திற்கிடமான உணவு விடுதி சோதனைக்கு உட்படுத்திய பொது சுகாதார பரிசோதகர்கள் பாவனைக்கு உதவாத இறைச்சி இருந்துள்ளமையைக் கண்டறிந்துள்ளனர்.
அத்துடன் தூய்மையற்ற முறையில் உணவுகளை கையாண்டமை மற்றும் இறைச்சினை கொள்வனவு செய்தமைக்கான பற்றுச்சீட்டு இல்லாமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் தெரியவந்துள்ளன.
மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய உணவு விடுதி மீது மல்லாகம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு 65,000 ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டதுடன் உணவு விடுதி சீல் வைக்கப்பட்டுள்ளது.
You may like this,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |