விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மர்ம ரேடியோ சிக்னல்! விஞ்ஞானிகள் ஆய்வு
விண்வெளியில் மர்ம ரேடியோ சிக்னல்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ள மர்ம ரேடியோ சிக்னல்கள் வேறொரு பிரபஞ்சத்தில் இருந்து வந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
மர்ம ரேடியோ சிக்னல்கள் தொடர்பில் ஆய்வு
வேற்று கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கின்றமை தொடர்பில் நீண்ட கால ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மர்ம ரேடியோ சிக்னல்கள் இந்த ஆராய்ச்சிக்கு கூடுதல் வலு சேர்த்து வருகின்றன.

அந்த வகையில் அண்மையில் வேறொரு பிரபஞ்சத்தில் இருந்து வந்த ரேடியோ சிக்னலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த சிக்னல் பூமியிலிருந்து 3 பில்லியன் ஒலி ஆண்டுகள் தொலைவில் இருந்து வந்திருக்கலாம் என்றும் கருதப்படுவதுடன், இது தொடர்பாக தொடர்ந்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.