நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்த மர்ம நபர்கள்...! அச்சத்தில் அரசியல்வாதிகள்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் அல்லாத குழுவொன்று நாடாளுமன்ற வளாகத்திற்குள் பிரவேசித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் அல்லாத நபர்கள் சிலர் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்து காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளதாகவும் தொலைபேசி அழைப்புகள் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் தற்போது குழு கூட்டம் நடத்தினோம். ஆளும் கட்சி உறுப்பினர்கள் அவ்விடத்திற்கு வந்தார்கள். இதனால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. குறித்த நபர்கள் யார் என தேடி பார்க்க வேண்டும். உடனடியாக அந்த நபர்களை கண்டுபிடித்து அவர்களை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதன் காரணமாக பல உறுப்பினர்கள் அச்சத்தில் உள்ளதாக“ அவர் குறிப்பிட்டுள்ளார்.





அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
