காத்தான்குடியில் கரையொதுங்கிய மர்மப்பொருள் : கடற்படையினர் தீவிர விசாரணை
மட்டக்களப்பு - காத்தான்குடி கடற்கரையில் பாரிய அளவிலான மர்மப்பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.பி. அழககோன் தெரிவித்துள்ளார்.
இந்த பொருள் நேற்று (13.03.2026) கரையொதுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
மர்மப்பொருள் கண்டுபிடிப்பு
சுமார் 25 அடி நீளமும் 4 அடி உயரமும் கொண்ட இந்த மர்மப்பொருள் ரெஜின் வகை பொருளால் செய்யப்பட்டதாக காணப்படுகிறது.
கப்பல் தரைதட்டும் போது அதன் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படும் தடுப்பு அமைப்பாக இது இருக்கக்கூடும் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இந்த மர்மப்பொருள் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
தற்போது குறித்த மர்மப்பொருள் காத்தான்குடி கடற்கரையிலேயே காணப்படுவதுடன், அதனை பார்வையிட பொதுமக்கள் திரளாகக் கூடிவருகின்றனர்.
உச்சக்கட்ட போர் பதற்றத்தில் மத்திய கிழக்கு! 24 மணி நேரத்தில் குறிவைக்கப்பட்ட ஈரானின் முக்கிய இலக்குகள்
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri