ஜப்பானில் பரவும் மர்மநோய்! மீண்டும் அச்சத்தின் பிடியில் பல உலக நாடுகள்
ஜப்பான் மற்றும் பல ஆசிய நாடுகளில் மர்ம காய்ச்சலொன்று பரவுவதால் உலக நாடுகள் பல மீண்டும் அச்சத்தின் பிடியில் சிக்கியுள்ளது.
மருத்துவமனைகளில் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கையும் தினமும் அதிகரித்து வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
மர்ம வியாதி
ஜப்பான் அரசாங்கம் நாடு தழுவிய இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோய் பரவலை அறிவித்துள்ளது பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதை அடுத்தே இவ்வாறு தகவல் வெளியாகியுள்ளது.
அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கை ஜப்பானை தொற்றுநோய் தொடர்பில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்க கட்டாயப்படுத்தியுள்ளது.
ஜப்பான் மட்டுமின்றி, பல நாடுகளும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலின் கடுமையான அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன.
காய்ச்சல், இருமல் மற்றும் தொண்டை எரிச்சல் போன்ற அறிகுறிகளுடன் தொடங்கி, விரைவாக ஒட்டுமொத்த பலவீனத்திற்கு வழிவகுக்கும் இந்த காய்ச்சல் முதன்மையாக இளையோர்களைப் பாதிக்கின்றதாக கூறப்படுகின்றது.
நோயாளிகளின் எண்ணிக்கை
இதன் விளைவாக, பல நாடுகளில் மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது.
ஜப்பானிய சுகாதார அதிகாரிகள் வழக்கத்தை விட ஐந்து வாரங்களுக்கு முன்னதாகவே இன்ஃப்ளூயன்ஸா பாதிப்பு எண்ணிக்கையில் கடுமையான உயர்வு இருப்பதாக தெரிவித்தனர்.
கடந்த இரண்டு தசாப்தங்களில் ஜப்பானில் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் இவ்வளவு வேகமாகப் பரவுவது இது இரண்டாவது முறையாக பரவுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 22 முதல் 28 வரை மட்டும் 4,000க்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.
செப்டம்பர் 29 முதல் ஒக்டோபர் 5 வரை, காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை 6,000 க்கும் அதிகமாக உயர்ந்ததுள்ளது.
செப்டம்பர் 22 முதல் ஒக்டோபர் 3 வரை, ஜப்பான் முழுவதும் சுமார் 135 பாடசாலைகள் மற்றும் சிறார் காப்பகங்கள் மூடப்பட்டுள்ளன.
ஜப்பானின் 47 மாகாணங்களில், 28 மாகாணங்களில் காய்ச்சல் அதிகரித்து வருவதாகவும், ஒகினாவா அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri
