குடிநீர் இணைப்பை வழங்குமாறு வலியுறுத்தி போராட்டம்
சுத்தமான குடிநீர் இணைப்பை வழங்குமாறு வலியுறுத்தி மூதூர் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை காரியாலயத்திற்கு முன்னால் நேற்று திங்கட்கிழமை (29) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சின்னக்குளம், இத்திக்குளம் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நடைபவணியாக வந்து மூதூர் நீர் வழங்கல் காரியாலயத்திற்கு முன்னால் இவ் கவனயீர்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
கவனயீர்ப்பில் ஈடுபட்டோர் சுலோகங்களை ஏந்தி கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சின்னக்குளம், இத்திக்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த கால யுத்தத்தில் இடம்பெயர்ந்து 2008 ஆண்டில் மீண்டும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு வாழ்ந்து வருகின்றனர்.
தற்போது இரண்டு கிராமங்களிலும் 247 குடும்பங்கள் வாழ்கின்றனர். எனினும் இதுவரை இவர்களுக்கு சுத்தமான குடிநீர் இணைப்புக்கள் வழங்கப்படவில்லை.
எனவே தமது கிராமங்களுக்கான குடிநீர் இணைப்பை புதிய அரசாங்கம் வழங்க வேண்டுமென வழியுறுத்தியே இவ் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த இடத்திற்கு நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் திருகோணமலை பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் மதிவண்ணண் பிரேம்சன் வருகை தந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து பேசினார்.
அவசரமாக 10000 லீற்றர் நீர் கொள்களன்கள் இரண்டினை இரண்டு கிராமங்களுக்கு தந்து எமது அலுவலகத்தினூடாக இரண்டு கிராமங்களுக்கும் நீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் குடிநீர் பிரச்சினைக்கு உரிய தீர்வினை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் இது சம்மந்தமாக 3 வாரத்திற்குள் எழுத்து மூலமாக அறியத்தருவதாகவும் தெரிவித்தனர்.
பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் அவரிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரினை கையளித்த பின்னர் அங்கிருந்து கலைந்து கொண்தனர்






உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam