இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் முத்து சிவலிங்கம் உடல் நாளை நுவரெலியாவில் தகனம்
மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதிகளில் ஒருவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான முத்துசிவலிங்கம் (23) காலை காலமானார்.
நீண்டநாள் நோய்வாய்பட்டிருந்த அவர், நுவரெலியாவில் தனது இல்லத்தில் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 79ஆகும்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 24 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு
நுவரெலியா பொது மயானத்தில் நடைபெறவுள்ளது.
முதலாம் இணைப்பு
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும், முன்னாள் பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் காலமானார்.
இவர் தனது 79ஆவது வயதில் இன்று (23.11.2022) காலமாகியுள்ளார்.
மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமான் காலத்திலிருந்து இவர் நாடாளுமன்ற உறுப்பினராக காணப்பட்டுள்ளார்.
இவர் பொருளாதார அபிவிருத்தி, சிறு மற்றும் ஆரம்பக் கைத்தொழில் பிரதி அமைச்சராக பதவி வகித்துள்ளார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் தொடர்பான அறிவித்தல் பின்னர் அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.