ரொசான் அக்மீமன எம்.பியுடன் முத்து நகர் விவசாயிகள் சந்திப்பு
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த கலந்துரையாடலானது நேற்று (19)மாவட்ட செயலக உப ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் கலந்து கொண்டு முத்து நகர் விவசாய காணி தொடர்பிலான அறிக்கை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரிடத்தில் முன்வைத்தார்.
சாதகமான தீர்வு
முத்து நகர் விவசாயிகள் மூன்றாவது நாளாக நேற்று சத்தியக் கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் தங்களது விவசாய நிலங்களை தங்களுக்கு வழங்க வேண்டும் என கோரி இதனை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் விவசாயிகளுக்கு சாதகமான தீர்வை பெற்றுத் தர முயற்சிப்பதாகவும் இலங்கை துறை முக அதிகார சபையினருடனும் கலந்துரையாடி விவசாய செய்கை மேற்கொள்ள உரிய நடவடிக்கைகளுக்காக பதிலை வழங்குவதாகவும் இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






