அமெரிக்க ஜனாதிபதியாக எலான் மஸ்க்!
உலக பணக்காரர் ஒருவர் நினைத்தால் வல்லரசு நாட்டையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்பது மஸ்க்- டிரம்ப் விஷயத்தில் புலனாவதாக அமெரிக்க நாளிதல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதை பிரதிபலிக்கும் முகமாக அமெரிக்காவின் 'டைம்' இதழ் தனது அட்டைப்படத்தில் வெளியிடப்பட்ட புகைப்படம் பெரும் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
குறித்த அட்டைப்படத்தில் அமெரிக்க ஜனாதிபதியின் இருக்கையில் எலான் மஸ்க் அமர்ந்திருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
TIME's new cover: Inside Elon Musk's war on Washington https://t.co/95Qictx4zP pic.twitter.com/QZ73CZqtnM
— TIME (@TIME) February 7, 2025
எலான் மஸ்க் தொடுத்துள்ள போர்
மேலும் வொஷிங்டன் மீது எலான் மஸ்க் தொடுத்துள்ள போர் என்ற தலைப்பில் குறித்த அட்டைப்படம் வெளியாகியுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் தெரியவருகையில்,
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்றுள்ள நிலையில் அரசின் செயல்திறனை மேம்படுத்தும் அரசு செயல்திறன் துறை(DOGE) என்ற புதிய நிர்வாகம் உருவாக்கப்பட்டு அதற்கு தொழிலதிபர்கள் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.
விவேக் ராமசாமி தலைவர் பதவியிலிருந்து விலகிய நிலையில் எலான் மஸ்க் கட்டுப்பாட்டுக்கு குறித்த நிர்வாகம் முழுமையாகச் சென்றுள்ளது.
டிரில்லியன் கணக்கான டொலர் சலுகைகள், மானியங்கள் மற்றும் வரி அறவீடுக்கான அரசாங்கத்தின் கட்டண அமைப்பு தரவுகளை அணுக, அந்நாட்டு திரைச்சேரி DOGEக்கு அனுமதி வழங்கியுள்ளது.
DOGE-க்கு அனுமதி
மேலும் வகைப்படுத்தப்பட்ட (Classified material) முக்கியமான விபரங்கள், கோப்புகள், ஆவணங்கள், அதி இரகசிய காணொளிகள், ஒலி ஆதாரங்கள், இலட்சக்கணக்கான அமெரிக்கர்களின் மிக முக்கிய தகவல்களையும் அணுக DOGE-க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசாங்க செலவினங்களை ஆண்டுதோறும் 1 டிரில்லியன் டொலர் முதல் 2 டிரில்லியன் டொலர் வரை குறைக்கும் திட்டத்தை மஸ்க் அன்மையில் முன்மொழிந்தார்.
இதனையடுத்து "சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் (USAID) மூடப்படும்" என மஸ்க் தன்னிச்சையாகத் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்தார்.
இதனால் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியா அல்லது எலான் மஸ்க் ஜனாதிபதியா என்ற கேள்விகளை அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு தரப்புகள் கேள்வி எழுப்பியுள்ளன.
இந்நிலையில், இந்த அட்டைப்படம் பகிரப்படுவதை தொடர்ந்து இதற்கு டிரம்ப் பதிலளித்துள்ளார்.
குறிப்பாக, “டைம்ஸ் இதழ் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதே தனது தெரியாது“ என்று கேலியாக கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |