13 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை:மூன்று பொலிஸ் அதிகாரிகளுக்கு விளக்கமறியல்
13 வருடங்களுக்கு முன்னர் நடந்த கொலை சம்பவம் தொடர்பாக விளைச்சிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட மூன்று பொலிஸ் அதிகாரிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் மற்றும் சர்ஜன்ட் ஆகியோரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்துன் லசித்த குமார விதான என்ற நபரை சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பாக இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
13 வருடங்களுக்கு முன்னர் கொழும்பு வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாளிகாவத்தை ரயில் வீடமைப்புத் திட்டத்திற்கு அருகில் படல்கம பொலிஸ் நிலையத்தில் அப்போது கடமையாற்றிய அதிகாரிகள், தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரை சுட்டுக்கொன்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சட்டமா அதிபரின் பணிப்புரிமைக்கு அமைய மூன்று பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.