ஜேர்மனியில் அதிபயங்கரமான சதித் திட்டம் தீட்டி பெண் படுகொலை

Germany Death
By Renuka Feb 03, 2023 12:12 PM GMT
Report

குடும்ப பிரச்சினைக்காக தன்னை போல தோற்றமளிக்கும் பெண்ணை ஒருவரை படுகொலை செய்து நாடகமாடிய கொடூர சம்பவம் ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது.

ஜேர்மனியில் சேர்ந்த 23 வயதான ஷஹ்ரபான் என்ற பெண் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். இந்த நிலையில், இவர் ஷேகிர் என்ற 24 வயது இளைஞரை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் ஷஹ்ரபான் தனது முன்னாள் கணவரை பார்க்க செல்வதாகக் கூறிவிட்டு சென்றநிலையில், அவர் வீடு திரும்பவில்லை. திடீரென பெண் மாயமான நிலையில், இது குறித்து அவரின் குடும்பத்தார் இது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

ஜேர்மனியில் அதிபயங்கரமான சதித் திட்டம் தீட்டி பெண் படுகொலை | Murder A Woman Was Hatched By Terrible Conspiracy

பொலிஸ் நடத்திய புலன் விசாரணை

அதன் பேரில், பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது வீட்டின் அருகிலுள்ள ஒரு இடத்தில் ஷஹ்ரபானின் காரை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். அந்த காருக்குள் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இளம்பெண்ணின் சடலம் கிடந்துள்ளது.

குறித்த சடலம் அச்சு அசலாக ஷஹ்ரபானின் தோற்றத்திலேயே இருந்துள்ளாதால், உயிரிழந்தது நமது மகள் தான் என ஷஹ்ரபானின் பெற்றோர் நம்பியுள்ளனர்.

பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போது,  அந்த சடலம் ஷஹ்ரபானின் சடலம் இல்லை என்ற உண்மை தெரியவந்துள்ளது.

இதனால் பொலிஸாரும், பெற்றோரும் குழம்பிப் போன நிலையில், பொலிஸ் நடத்திய புலன் விசாரணையில் உண்மை அம்பலமானது. அந்த சடலம் ஷஹ்ரபான் இல்லை என்றால் யார் அது என்பதை முதலில் பொலிஸ் விசாரித்துள்ளனர்.

அப்போது தான் உயிரிழந்தது அழகு சாதன பொருள்கள் விற்பனை செய்யும் ஒரு மொடல் அழகி என்றும் அவர் பெயர் கதீட்ஜா வயது 23 என்ற விவரமும் தெரியவந்துள்ளது.

ஜேர்மனியில் அதிபயங்கரமான சதித் திட்டம் தீட்டி பெண் படுகொலை | Murder A Woman Was Hatched By Terrible Conspiracy

 நாடகம் என்ற அதிர்ச்சி உண்மை

இவரின் சடலம் ஷஹ்ரபானின் காருக்குள் ஏன் வந்தது, மாயமான பெண் என்ன ஆனார் என 6 மாதங்களாக பல கோணங்களில் பொலிஸ் விசாரிக்க, இறுதியில் தான் இந்த கொலையே ஷஹ்ரபான் போட்ட நாடகம் என்ற அதிர்ச்சி உண்மை தெரியவந்தது.

ஷஹ்ரபான் தனது குடும்ப பிரச்சினைகளில் இருந்து தப்பித்து காதலனுடன் உல்லாசமாக வாழ சதித்திட்டம் தீட்டியுள்ளாார்.

அதன் பேரில் தான் இறந்து விட்டதாக நாடகமாடி, பெற்றோர் உள்ளிட்ட அனைவரையும் நம்ப வைக்க வேண்டும் என திட்டமிட்டு தன்னை போலவே தோற்றமளிக்கும் ஒரு பெண்ணை தேடியுள்ளார்.

இதற்காக இன்ஸ்டாகிராமில் பல போலி கணக்கை பயன்படுத்தி பெண்களுக்கு வலை வீசியுள்ளார். அப்போது தான் ஷஹ்ரபான் வீட்டில் இருந்து 100 மைல் தூரத்தில் வசிக்கும் கதீட்ஜா என்ற 23 வயதுடைய பெண், ஷஹ்ரபானின் வலையில் சிக்கியுள்ளார்.

தனது உடல் தோற்றம் போலவே கதீட்ஜா இருப்பதை உறுதி செய்து கொண்ட ஷஹ்ரபான், இன்ஸ்டாகிராமில் போலி கணக்கில் இருந்து சகஜமாக பேசி நட்பை வளர்த்துள்ளார்.

அடிக்கடி அழகு சாதன பொருள்களை வாங்கி கதீட்ஜாவுக்கு அனுப்பியுள்ளார். பின்னர் ஒரு நாள் அழகு சாதன பொருள்களை நேரில் தருவதாக கூறி கதீட்ஜாவுக்கு அழைப்பு விடுத்துள்ளர்.

கதீட்ஜாவும் அதற்கு சம்மதம் தரவே, ஷஹ்ரபானும் அவரது காதலர் ஷேகீரும் கதீட்ஜாவை காரில் ஏற்றிக்கொண்டு ஊரின் ஒதுக்குப்புறமாக உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று கொலை செய்துள்ளனர்.

ஜேர்மனியில் அதிபயங்கரமான சதித் திட்டம் தீட்டி பெண் படுகொலை | Murder A Woman Was Hatched By Terrible Conspiracy

சதித் திட்டம் தீட்டி கொலை!

அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக கதீட்ஜாவின் முகத்தில் மட்டும் 50 தடவைகள் கத்தியால் குத்தி கொடூரமாக முகத்தை சிதைத்துள்ளனர்.

பின்னர் சடலத்தை காரில் கிடத்தி வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிய இருவரும் தலைமறைவாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து 6 மாத காலம் போலி கொலை நாடகமாடி ஷஹ்ரபான் தனது காதலர் ஷேகீருடன் பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்.

அதிபயங்கரமான சதித் திட்டம் தீட்டி கொலை செய்த ஜோடியை ஜேர்மனி பொலிஸார் சிறையில் அடைத்துள்ளனர்.

மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
நன்றி நவிலல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US