சிகிச்சை முடிந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் முத்தையா முரளிதரன்
பிரபல கிரிக்கெட் நட்சத்திரமான முத்தையா முரளிதரன் சிகிச்சை முடிந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முரளிக்கு, சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அன்ஜியோபிளாஸ்ட்ரி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அவர் நலமாக இருப்பதாகவும் இன்னும் சில நாட்களில் ஐ.பி.எல் போட்டிகளில் பயிற்றுவிப்பாளராக மீளவும் களமிறங்குவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சற்று நேரத்திற்கு முன்னர் முரளிதரன் வைத்தியசாலையிலிருந்து சிகிச்சையை முடித்துக் கொண்டு வெளியேறியதாக அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வழமையான மருத்துவ பரிசோதனையின் போது இரத்த குழாய் ஒன்றில் ஏற்பட்டிருந்த அடைப்பு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதற்கான சிகிச்சை நேற்றைய தினம் மேற்கொள்ளப்படதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மாரடைப்பு ஏற்பட்டதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என அவரது சக வீரரும், வர்ணணையாளருமான ரஸல் ஆர்னல்ட் தெரிவித்துள்ளார்.
முரளிதரன் நலமாக இருப்பதாகவும், சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்தது எனவும், அவர் சிகிச்சை பெற்ற வைத்தியசாலை அதிகாரபூர்வமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 12 மணி நேரம் முன்
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri