முள்ளிவாய்க்கால் 15ஆம் ஆண்டு நினைவை ஒட்டி மாபெரும் கவிதைப் போட்டி
தமிழர் தாயக மக்களை கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் நிகழ்வின் 15ஆம் ஆண்டு நினைவாக முல்லைத்தீவு - வள்ளிபுனம் பகுதியில் கவிதைப் போட்டி ஒன்று நடாத்தப்பட்டு வருகின்றது.
இந்த கவிதைப் போட்டியானது இன்று (17.05.2024) வள்ளிபுனம் - றேடியன் வளாகத்தில் இடம்பெற்று வருகின்றது.
தமிழினப்படுகொலையின் நினைவாக, பொது திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்து மலர்தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டது.
கவிதை தலைப்புக்கள்
இதன்போது, 'நினைவழியாமல் வீசும் கந்தகக் காற்று', 'அதற்கு பிறகும் ஒரு பூ பூக்கத்தானே செய்தது' மற்றும் 'நந்திக்கடலோரம் காயும் நிலா' போன்ற தலைப்புக்கள் கவிதை எழுதுவதற்காக வழங்கப்பட்டுள்ளன.
மேலும், இந்நிகழ்வில் தமிழ்பற்றாளர்கள், போட்டியாளர்கள், பார்வையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |