முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் பொலிஸ் ஜீப் தடம்புரண்டு விபத்து.
முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் மணவாளன்பட்டமுறிப்புக்கு அண்மித்த பகுதியில் இன்று (30.10.2025) பொலிஸ் ஜீப் வாகனம் ஒன்று தடம்புரண்டு விபத்திற்குள்ளானது.
குறித்த வீதியில் பயணித்த பொலிசாரின் ஜீப் வாகனத்தின் முன் திடீரென மாடுகள் குறுக்கே வந்தமையால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியிலிருந்து விலகி தடம்புரண்டு விபத்தினை சந்தித்துள்ளது.
இவ்விபத்தில் வாகனத்தில் பயணித்த பொலிசார் சிலர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், ஜீப் வாகனம் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சேதமடைந்த வாகனத்தை மீட்டு கொண்டு சென்றுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சமீபகாலமாக வீதிகளில் கட்டாக்காலி கால்நடைகள் அலைந்து திரிவது காரணமாக விபத்துகள் அதிகரித்து வருகின்றது.

வருமுன் காத்தல்: அனர்த்த காலத்தின் பேச்சாளர்கள் 7 மணி நேரம் முன்
மோடியிடம் கோரிக்கை வைத்த பாகிஸ்தான் பெண்: 2வது ரகசிய திருமணம்! கணவர் மீது குற்றச்சாட்டு News Lankasri