சர்ச்சையை ஏற்படுத்திய தோனியின் ஆட்டமிழப்பு : அதிருப்தியில் இரசிகர்கள்
நடப்பு ஐபிஎல் (IPL) தொடரின் 25ஆவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (12) நடைபெற்றது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 103 ஓட்டங்கள் எடுத்தது.
இதனை தொடர்ந்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 107 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
நரைன் வீசிய 16ஆவது ஓவர்
இந்நிலையில், போட்டியில் சி.எஸ்.கே. அணித்தலைவர் எம்.எஸ். தோனி எல்.பி.டபிள்யூ. (LBW )முறையில் ஆட்டமிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
The UltraEdge showed slight murmurs as the ball passed MS Dhoni's bat 👀
— Star Sports (@StarSportsIndia) April 11, 2025
What do you make of the third umpire's decision? 🤔#IPLonJioStar 👉 #CSKvKKR | LIVE NOW on Star Sports Network & JioHotstar! pic.twitter.com/zAjgaEsO8h
சுனில் நரைன் வீசிய 16ஆவது ஓவரின் மூன்றாவது பந்தில் தோனி எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
நடுவரின் முடிவை தோனி மேல்முறையீடு செய்தார். இதன்போது பந்து பேட்டை கடக்கும்போது சிறிய அல்ட்ராஎட்ஜ் ஸ்பைக் வந்தது.
இதனை நீண்ட நேரம் பார்த்த மூன்றாவது நடுவர் இறுதியாக ஆட்டமிழப்பைக் கொடுத்தார்.
தோனி ஓட்டங்களை குவிக்காமல் உடனடியாக ஆட்டமிழந்தது இரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |