மகிந்தவின் விஜேராம மாளிகைக்கு எம்.பிக்கள் இரகசிய விஜயம்!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தங்கியுள்ள விஜேராம மாவத்தையிலுள்ள அரச மாளிகைக்கு மொட்டுக்கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜயம் செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த காலங்களில், மொட்டுக்கட்சியின் உயர் பதவியில் இருந்த சிலலும், பின்னர் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளித்தவர்களும், இவ்வாறு சென்று வருவதாக கூறப்படுகிறது.
அதைத் தவிர, தற்போதைய எதிர்க்கட்சி தரப்பில் உள்ள இரண்டு அல்லது மூன்று உறுப்பினர்கள் இரகசிய சந்திப்புக்களை மேற்கோள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மகிந்தவுக்கு ஆதரவு
கடந்த காலங்களில் இரத்தினபுரி, களுத்துறை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றம் சென்ற சில உறுப்பினர்களே இவ்வாறு விஜேராம இல்லத்திற்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில், இவர்களில் பலர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும், வேறு வழியின்றி விஜேராம இல்லத்தை நோக்கி விரைவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
மேலும், எதிர்வரும், தேர்தலில் வெற்றி பெற மகிந்தவுக்கு இந்த சந்திப்புக்கள் முக்கியத்துவம் மிக்கவை என்றும் கூறப்படுகிறது.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 12 மணி நேரம் முன்

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி... அமெரிக்காவின் சக்திவாய்ந்த வெடிகுண்டுக்கு எதிரி நாடு ஒன்றால் சிக்கல் News Lankasri

அண்ணா சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு மிர்ச்சி செந்தில் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
