கண்டி வீதியில் பட்டா - மோட்டார் சைக்கிள் விபத்து : பெண் காயம்
வவுனியா கண்டி வீதியில் (ஏ9) வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக இன்று மதியம் 2.20 மணியளவில் இடம்பெற்ற பட்டா - மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண்ணொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா நகரிலிருந்து கண்டி வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வவுனியா தெற்கு வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக வீதியில் திரும்ப முற்பட்ட சமயத்தில் மோட்டார் சைக்கிளின் பின்புறமாக வந்த பட்டா ரக வாகனம் மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளியுள்ளது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதியான 25 வயது மதிக்கத்தக்கப் பெண் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளின் சாரதி போக்குவரத்து வீதி விதிமுறைகளை மீறி ( முன்னால் திருப்பத்தடை) மோட்டார் சைக்கிளை வீதியில் முற்பட்டமையே விபத்துக்குரிய காரணமென வவுனியா போக்குவரத்து பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவருகின்றது.







அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
