விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவருடைய செயற்பாடு தொடர்பில் கூறிய அரசியல் பிரமுகர் - செய்திகளின் தொகுப்பு(Video)
பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் இருக்கும் வரை எந்த ஒரு அரசியல் தீர்வு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்பதே எமது நம்பிக்கையாக இருந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அதற்கு காரணம் அவர்கள் துப்பாக்கியை வைத்துக்கொண்டே கதைத்தார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.
புலிகள் எப்போதுமே யுத்தத்தை பலபடுத்துவதற்காகவே சமாதானப் பேச்சுவார்த்தைகளை பயன்படுத்தினார்கள். புலிகள் சிங்கள மக்களை மட்டும் யுத்தத்தில் கொல்லவில்லை.
தமிழ் தலைவர்களையும் கொலை செய்தனர். அத்துடன் மூன்று லட்சத்துக்கு மேல் தமிழ் மக்களை பணயக் கைதிகளாக வைத்திருந்தனர். அவை மனித உரிமை மீறல்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய செய்திகளின் தொகுப்பு,