ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கி ரவைகள் மீட்பு: தொடரும் மீட்புப்பணிகள் (Video)
கிளிநொச்சி கோரக்கன் காட்டுப்பகுதியில் உள்ள தனியார் காணியொன்றிலிருந்து இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து மீட்புப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோரக்கன் கட்டு பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் அடையாளம் காணப்பட்ட இடத்தில் வெடி பொருட்களை மீட்கும் பணி நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.
கோரக்கன் கட்டு கிராம அலுவலர் முன்னிலையில் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக விசேட அதிரடிப்படையினர், பொலிஸாரால் அகழ்வுப் பணி மேற்கொள்ளப்பட்டது.
நேற்று காலை 9 மணி முதல் பிற்பகல் வரை முன்னெடுக்கப்பட்ட அகழ்வின்போது ஒரு லட்சத்து09 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.
நேற்று மாலை நிறுத்தப்பட்ட பணிகள் தொடர்ந்து இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



