பிரித்தானியாவில் இந்த ஆண்டில் மட்டும் 300இற்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவு
பிரித்தானியாவில் 2025ஆம் ஆண்டில் மட்டும் 300இற்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக பிரித்தானியாவில் புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதன்படி, சராசரியாக நாளொன்றில் ஒரு நிலநடுக்கம் என்ற விகிதத்தில் இந்த அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.
ஆண்டுக்கு 200 முதல் 300 நிலநடுக்கங்கள்
கடந்த ஒக்டோபர் 20ஆம் திகதி ஸ்கொட்லாந்தின் லோச் லியோன் (Loch Lyon) பகுதியில் சில மணிநேர இடைவெளியில் 3.7 மற்றும் 3.6 மெக்னிடியூட் என இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகின.
இதுவே அந்த நாட்டில் இந்த ஆண்டின் மிகப்பெரிய நிலநடுக்கங்களாகும்.

டிசம்பர் மாத தொடக்கத்தில் லங்காஷயரில் 3.3 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சில்வர் டேல் (Silverdale) பகுதியில் 2.5 மெக்னிடியூட் அளவில் பின் அதிர்வுகள் உணரப்பட்டன.
ஸ்கொட்லாந்தின் ஹைலேண்ட்ஸ், தெற்கு வேல்ஸ், யோர்க்ஷயர் மற்றும் லங்காஷயர் ஆகிய பகுதிகள் அதிக நில அதிர்வு செயல்பாடுகளைக் கொண்ட பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இது குறித்து நில அதிர்வு நிபுணர் பிரையன் பாப்டி கூறுகையில், "பிரித்தானியாவில் ஆண்டுக்கு 200 முதல் 300 நிலநடுக்கங்கள் வரை ஏற்படுவது வழக்கம் என்றாலும், 2025இல் இது 309 ஐ தாண்டியுள்ளது. இவற்றில் 20 முதல் 30 நிலநடுக்கங்களை மட்டுமே பொதுமக்களால் உணர முடிந்தது" என்றும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |