திடீரென பாடசாலையை சுற்றிவளைத்த அதிகளவிலான பொலிஸார்
கொட்டுக்கச்சிய - நவோத்யா வித்தியாலயத்திற்குள் திடீரென இன்றையதினம் பொலிஸார் நுழைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பாடசாலைகளுக்குள் போதைப்பொருள் பாவனையை தடுக்கும் வகையில் இவ்வாறு சோதனை நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை 6 மணி முதல் பாடசாலை தொடங்கும் வரை பாடசாலைகளுக்கு வரும் மாணவர்களின் பைகள், உடைகள் சோதனை செய்யப்பட்டன.
கடுமையான சோதனை
அண்மைக்காலமாக பாடசாலைகளுக்கு பல்வேறு வகையான போதை மாத்திரைகள் மற்றும் போதைப்பொருட்கள் வருவதால் பாடசாலை நடவடிக்கைகளில் பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, புத்தளம் கல்வி வலய பாடசாலைகளுக்கு உத்தியோகபூர்வ அறிவித்தல் இன்றி பொலிஸாரால் அவசர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக 30 பேர் கொண்ட ஆண் மற்றும் பெண் பொலிஸ் குழு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தர்ப்பத்தில் பாடசாலையை சுற்றியுள்ள அனைத்து வீதிகளும் ஏனைய பொலிஸ் அதிகாரிகளால் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்க்ப்படுகின்றது.