மத்திய வங்கி ஆளுநரின் மாதாந்த சம்பளம் எவ்வளவு...! வெளிவரும் அதிர்ச்சி தகவல்
மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தனது மாதாந்த சம்பளம் பற்றிய தெளிவுப்படுத்தலை வழங்கியுள்ளார்.
இன்று (24.11.2022) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த தெளிவுப்படுத்தலை வழங்கியுள்ளார்.
கடந்த காலங்களில் மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் மாதாந்தம் 25 இலட்சம் ரூபா சம்பளம் பெறுவதாகவும் அதற்கு மேலதிகமாக சர்வதேச நாணய நிதியத்தில் ஓய்வூதியம் பெறுவதாகவும் பல அரசியல்வாதிகள் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க பதிலளித்துள்ளார்.
குற்றச்சாட்டுக்கள்

இதன்போது தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை என தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டின் பொறுப்புள்ள அரசியல்வாதிகள் இவ்வாறான பொய்யான அறிக்கையை வெளியிடும் போது, எல்லா இடங்களிலும் அதனை உண்மையென அறிவிப்பது மிகவும் வருத்தமளிக்கிறது என கூறியுள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுநர் என்ற வகையில் எனது சம்பளம் மாதம் 4 இலட்சம் ரூபா மாத்திரமே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமும் அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடும்..! 10 மணி நேரம் முன்
குழந்தைக்கு ஒரு வயது கூட ஆகல... பிக் பாஸ் சீசன் 10-ல் ஜாய் கிரிஸில்டா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள் Manithan
ஜெயிலர் 2 ரிலீஸ் தள்ளிப்போகிறதா? சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அறிவிப்பு.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி Cineulagam