வெளிநாடுகளில் இருந்து உண்டியல் ஊடாக பணம் அனுப்பினால் ஆபத்து
சட்டவிரோதமான வழிகளில் வெளிநாட்டு நாணயங்கள் மாற்றும் மையங்களை (உண்டியல் பரிமாற்றம்) சோதனையிட பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் கூட்டு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
நாட்டில் டொலர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள போதிலும் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயங்களை பரிவர்த்தனை செய்யும் நிறுவனங்கள் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே நேற்று முன்தினம் பெப்பிலியான பிரதேசத்திலுள்ள வீடொன்றில் 2 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 50,000 யூரோக்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் பணம் எவ்வாறு சம்பாதித்தார்கள் அல்லது எவ்வாறு கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதேவேளை, பொரலஸ்கமுவ பிரதேசத்தில் கடந்த 14ஆம் திகதி விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சுமார் ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் பெறுமதியான 47,000 அமெரிக்க டொலர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறான சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகளை முழுமையாக முறியடிக்கும் நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த வெளிநாட்டு நாணய பரிவர்த்தனை புறக்கோட்டை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அதிக அளவில் நடைபெற்று வருவது கண்டறியப்பட்டுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவின் பூரண மேற்பார்வையின் கீழ் இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

லண்டனில் 26 வயது இலங்கை பெண்ணிற்கு நடந்த ஆச்சரியம்! கனவுல கூட நினைச்சு பார்க்கல என மகிழ்ச்சி News Lankasri

விஜய் டிவியில் இருந்து வெளியேறிய ரச்சிதாவுக்கு கிடைத்திருக்கும் பெரிய வாய்ப்பு! என்ன தெரியுமா Cineulagam

அடுத்த 15 நாட்கள் இந்த 5 ராசிக்கும் காத்திருக்கும் அதிர்ஷ்டம்! திடீர் பணவரவு யார் யாருக்கு தெரியுமா? Manithan

வாடிய முகத்துடன் மீனா! மறைந்த கணவர் வித்யாசாகரின் புகைப்படம் அருகில் பரிதாபமாய் இருக்கும் சோகம் Manithan
