புத்தளத்தில் கௌரவிக்கப்பட்ட மோகன் சுவாமிகள்
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் மோகன் சுவாமிகள் புத்தளம் சேனைக் குடியிருப்பு பொது அமைப்புக்களால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த கௌரவிப்பு நிகழ்வு, நேற்று (11.05.2024) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
பல இன மக்களும் வாழும் புத்தளம் சேனைக்குடியிருப்பில் பல்வேறு நிவாரண உதவிகள், மாணவர்களுக்கான கல்விச் செயற்றிட்ட உதவிகள் மற்றும் அறநெறிப் பாடசாலைகளுக்கான உதவிகள் ஆகியவற்றை வழங்கியமைக்காகவே மோகன் சுவாமிகள் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
வழங்கப்பட்ட நிதி
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்குவதற்காக ரூபா 40,000 நிதியும் அறநெறி மாணவர்களை திருக்கேதீச்சரம் அழைத்து செல்வதற்காக ரூபா 50,000 நிதியும், பண்டாரவளை, அப்புத்தளை விஹாரகலை தமிழ் வித்தியாலயத்திற்கு படிக்கட்டு கட்டுமானப் பணிக்காக முதலாம் கட்ட நிதியாக ரூபா 100,000 நிதியும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், புத்தளம் சேனைப்புலவு பிரதேச மக்கள் அமைப்பு பிரதிநிதிகள், சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பக்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |