இலங்கை மீதான அழுத்தங்களை கையில் எடுப்பாரா மோடி..! (Video)
தமிழருக்கான தீர்வு விவகாரத்தில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு என்ற விடயம் தற்போது தமிழ் தேசிய தரப்புகளிடம் இருந்து வெளிவந்தவண்ணம் உள்ளன.
மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் டெல்லி விஜயத்தை மையப்படுத்தியும், இலங்கை மீதான இந்தியாவின் அழுத்தங்களை வலியுறுத்தியும் தமிழ் தரப்புக்களில் இருந்து டெல்லிக்கு கடிதங்கள் பறந்தவண்ணம் உள்ளன.
குறித்த கடிதங்களில், 13 ஆம் திருத்த சட்டத்தை ஒரு தரப்பும், சமஸ்டியை ஒரு தரப்பும் வலியுறுத்தியுள்ளன.
இந்த விடயங்களை மையப்படுத்தியே ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் மோடிக்கும் நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தையில், அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வின் அழுத்தம் இலங்கை மீது இந்தியா செலுத்த வேண்டும் என இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
எனினும் இந்த வலியுறுத்தல்களை மையப்படுத்திய அழுத்தங்களை நரேந்திர மோடி கையில் எடுப்பாரா..? இல்லையா..? என்பதை ஆராய்கிறது இன்றைய செய்தி வீச்சு.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri
