இஸ்ரேலில் மோடி: காவி நிற ஆடை ஒற்றுமையால் மலர்ந்த சுவாரஸ்யமான தருணம்

Narendra Modi India Israel
By Amal Feb 26, 2026 12:01 PM GMT
Report

9 ஆண்டுகளுக்குப் பிறகு இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, பென்-குரியன் விமான நிலையத்தில் அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாரா நெதன்யாகு ஆகியோர் நேரில் சென்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வரவேற்பு நிகழ்வின் போது ஒரு சுவாரஸ்யமான தற்செயலான நிகழ்வு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

சுவாரஸ்யமான நிகழ்வு

பிரதமர் மோடி அணிந்திருந்த கோட் பையில் இருந்த Pocket Square துணியின் நிறமும், சாரா நெதன்யாகு அணிந்திருந்த உடையின் நிறமும் ஒரே மாதிரியாக (காவி நிறம்) இருந்தது.

பல முக்கிய ஆதாரங்களுடன் கைதான சுரேஷ் சாலே - பதற்றத்தில் ராஜபக்‌சக்கள்! பலர் அறியாத இரகசியங்கள்

பல முக்கிய ஆதாரங்களுடன் கைதான சுரேஷ் சாலே - பதற்றத்தில் ராஜபக்‌சக்கள்! பலர் அறியாத இரகசியங்கள்

இதனைப் பிரதமர் நெதன்யாகு சுட்டிக்காட்டியதும், "இது காவி நிறம்" (That’s Saffron) என்று பிரதமர் மோடி புன்னகையுடன் பதிலளித்தார்.

இஸ்ரேலில் மோடி: காவி நிற ஆடை ஒற்றுமையால் மலர்ந்த சுவாரஸ்யமான தருணம் | Modi As Netanyahu Notes Sartorial Match With Wife

இந்த நெகிழ்ச்சியான தருணம் அங்கிருந்தவர்களிடையே சிரிப்பொலியை ஏற்படுத்தியது.

நெதன்யாகுவுடனான சந்திப்பிற்குப் பிறகு பிரதமர் மோடி தனது 'X' தளத்தில் பதிவிட்டதாவது: "தொழில்நுட்பம், நீர் முகாமைத்துவம், விவசாயம் மற்றும் திறமை அடிப்படையிலான கூட்டாண்மை போன்ற துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்தும் நாங்கள் கலந்துரையாடினோம்" என குறிப்பிட்டுள்ளார்.

தனிப்பட்ட நட்பு

திடீரென பார்வை இழந்த மாணவன்! பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்

திடீரென பார்வை இழந்த மாணவன்! பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்

மேலும் பிரதமர் மோடியை ஒரு "சிறந்த தலைவர்" எனப் புகழ்ந்த நெதன்யாகு, "எங்களுக்கிடையிலான தனிப்பட்ட நட்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான உறவைப் பிரதிபலிக்கிறது" எனத் தெரிவித்தார்.

இந்த பயணத்தின் போது இஸ்ரேல் நாடாளுமன்றமான கினெசெட்டில் (Knesset) பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.

இதன் மூலம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.

இலங்கையின் ‘எப்ஸ்டன் கோப்புகள்’- அதிர்ச்சிதரும் ஆதாரங்கள்! அம்பலப்படுத்தப்பட்ட விடயங்கள்..

இலங்கையின் ‘எப்ஸ்டன் கோப்புகள்’- அதிர்ச்சிதரும் ஆதாரங்கள்! அம்பலப்படுத்தப்பட்ட விடயங்கள்..

2017 ஆம் ஆண்டு மோடியின் பயணத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு, விவசாயம் மற்றும் நீர் மேலாண்மை ஆகியவற்றில் இரு நாடுகளும் நெருக்கமாகச் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US